ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. கே.திருக்கடல், கே.உதயம் ஆகியொர் தயாரிக்கும் இப்படத்தின் முக்கியமான சண்டைக்காட்சிக்காக ரூ.1 கோடி செலவில் கார்கோ விமான செட் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகையில், “சரக்கு விமானத்தில் காட்சி நடைபெறுவதாக திட்டமிட்டிருந்ததால், சண்டைக்காட்சிகள் எடுக்க மிக சவாலாக இருந்தது. ஜெய் மிக அர்ப்பணிப்புடன் அவருடைய ஆக்சன் காட்சிகளை, டூப் பயன்படுத்தாமல் தானே ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். படப்பிடிப்பு முழுவதும் ஜெய் மிகவும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்பாகவும் இருந்து ஒத்துழைத்ததால், காட்சிகளை மிக விரைவாக, எளிதாக படமாக்க முடிந்தது.” என்றார்.

இதில் ஜெய்க்கு ஜோடியாக பானு ரெட்டி நடிக்க, இவர்களுடன் பிக் பாஸ் சினேகன், ராகுல் தேவ், தேவ் கில், ஜெயபிரகாஷ், சந்தான பாரதி, பழ.கருப்பையா, மோகன்ராம், தேனப்பன், பேபி மானஸ்வி மற்றும் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.
ஜானி லால் மற்றும் செவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷால் பீட்டர் இசையமைக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். என்.எம்.மகேஷ் கலையை நிர்மாணிக்க, ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமிக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளராக பிரபாகர் பணியாற்றுகிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...