Latest News :

ஜெய் சைக்கோவாக நடிக்கும் ‘பட்டாம்பூச்சி’
Thursday April-21 2022

அவனி டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிக்க, சுந்தர்.சி நாயகனாகவும், ஜெய் வில்லனாகவும் நடிக்கும் படம் ‘பட்டாம்பூச்சி’. 1980 களில் நடக்கும் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஜெய் கொடூரமான சைக்கோ கொலைகாரனாக நடிக்க, அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க துடிக்கும் காவல்துறை அதிகாரியாக சுந்தர்.சி நடிக்கிறார். இவர்களுடன்  ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

பத்ரி எழுதி இயக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய, நவநீத் சுந்தர் இசையமைக்கிறார். பென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்ய, ராஜசேகர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.  நரு.நாராயணன், மகா கீர்த்தி திரைக்கதை எழுதியுள்ளனர்.

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ,ஜெய், சுந்தர்சி இருவரின் கதாபாத்திரத்தை விளக்கும் போஸ்டர் .இவை அனைத்துமே மிகவும் வித்தியாசமாக இருப்பதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போஸ்டரைப் பார்த்தால் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளதாக அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

 

Pattampoochi

 

இந்தப்படத்தில் ஜெயில் காட்சியில் வரும் ஒரு கானா பாடலை ஜெய் இசையமைக்க இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். “ஏக்கு  மாறு  தோ துக்கடா வாங்கடா ஜெயிள்ள தவ்லத்தா வாழ்ந்து வரும் நாங்கடா...”  எனத் தொடங்கும் இந்தப் பாட்டுக்கு ஜெயில் குத்து என்று பெயரிட்டுள்ளனர்.

 

மே மாதம் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதிலிருந்தே துவங்கிவிட்ட நிலையில், விரைவில் டீசர் மற்றும் பாடல் வீடியோ வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் . 

Related News

8183

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery