’கே.ஜி.எப் 2’ படம் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது பல படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில், அந்நிறுவனம் தனது 14 வது படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இந்த படத்தை சுதா கொங்குரா இயக்குகிறார்.
மிகத்தரமான மற்றும் பிரம்மாண்டமான படங்களை தந்துகொண்டிருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். பிரபாஸின் ’சலார்’ உள்பட சமீபத்தில் வெளியாகி இந்தியத் திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. KGF2 படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த பெருமைக்குரிய நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அடுத்தப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு அதன் எதிர்பார்ப்பை இப்பவே எகிற வைத்துள்ளது
’சூரரைப் போற்று’ படம் மூலமாக சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
சுதா கொங்கரா தற்போது ’சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின் 2D entertainment சார்பாக சூர்யா தயாரித்து நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அதன் பிறகு ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...