Latest News :

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ டிரைலர் ரிலீஸ்
Friday April-22 2022

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில், எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்திருக்கும் படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

 

2022  ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து,  ரசிகர்களிடம்  பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  முக்கியமான படங்களின் ஒன்று ’காத்து வாக்குல ரெண்டு காதல்’. விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தென்னிந்திய திரைத்துறையின் முதன்மை நாயகிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.  

 

தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது, முன்னதாக  இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான  “டூ டூடூ டூ டூடூ” பாடல், ரெண்டு காதல், நான் பிழை போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “டிப்பம் டப்பம்” சிங்கிள் பாடல் அனைவர் மனதை கவர்ந்த பாடலாக பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,  இன்று வெளியான டிரெய்லர், பெரும் வரவேற்பை பெற்றதுடன், இணையமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.  

 

தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க,  ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில்  இயக்கியுள்ள படம் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’.

 

தமிழ் சினிமாவில் காதல் காமெடி படங்கள் இல்லையெனும் ஏக்கத்தை போக்கும் படி, நீண்ட இடைவேளைக்கு பிறகு, அழகான காதல் கவிதையாக, மனம் விட்டு சிரித்து மகிழும் இனிமையான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளதை டிரெய்லர் நிரூபித்துள்ளது.

 

 

வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8186

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery