ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அவற்றில் ஒரு படத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ‘டாடா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கணேஷ் கே.பாபு இயக்கும் இப்படம் அழகான காதல் கதையாக உருவாகிறது.
படம் குறித்து இயக்குநர் கணேஷ் கே.பாபு கூறுகையில், “அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானது என்பதால் இப்படத்திற்கு இந்த தலைப்பை வைத்தோம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த வார்த்தையை குறிப்பிட்டிருப்பார்கள், அல்லது கேட்டிருப்பார்கள். தவிர, படத்தில் இந்த தலைப்புக்கு நிறைய முக்கியத்துவம் உள்ளது திரைக்கதைக்கு மிகவும் பொருத்தமானதாகவும் இந்த தலைப்பு இருக்கும். படத்தின் மொத்தக் குழுவினரும் படத்தை மிகச்சிறப்பாக வடிவமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படத்தின் இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது, முழு படப்பிடிப்பும் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கின்றோம். முழுப்படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது.” என்றார்.

கே.பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ‘ராசுக்குட்டி’ படத்திற்கு பிறகு சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், வாழ் புகர் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் இப்படத்தின் நடிக்கின்றனர்.
எழில் அரசு.கே ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்ய, சண்முக ராஜ் கலையை நிர்மாணிக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...