Latest News :

’ஓ மை டாக்’ படத்திற்கு குவியும் பாராட்டுகள்
Sunday April-24 2022

அமேச்சான் பிரைம் வீடியோவில் சமீபத்தில் வெளியான ‘ஓ மை டாக்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்லது. குடும்ப பொழுதுபோக்கு மற்றும் சிறுவர்களுக்கான படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சிம்பா என்ற நாய் குட்டிக்கும், அர்ஜுன் என்ற சிறுவனுக்கும் இடையே இருக்கும் உணர்வூப்பூர்வமான பாசத்தை மிக அழகாக சொல்லியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜயகுமார், அவருடைய மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜயின் மகன் ஆர்ணவ் விஜய் என்று மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படம் ரசிகர்களிடம் மட்டும் இன்றி ஊடகம் மற்றும் திரையுலகினரிடமும் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த ஊடகங்கள் விமர்சன ரீதியாக படத்தை கொண்டாட, திரையுலக பிரபலங்கள் பலர் படம் பற்றிய தங்களது கருத்துக்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ‘ஓ மை டாக்’ படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஒரு செல்லப்பிராணி காதலனாக, இந்த படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.

 

அவருடைய பதிவுக்கு படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவில், “மிக்க நன்றி!!  நான் ஜான்டி ரோட்ஸ் உடைய  பெரிய ரசிகர்! உங்கள் மகள் இந்தியா ரோட்ஸுக்கும் இப்படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்!!” என்ற தெரிவித்தார்.

 

நடிகர் மகேந்திரன் வெளியிட்ட பதிவில், “#OhMyDog இந்த திரைப்படத்தில் ஆர்ணவ்விஜய் நடிப்பை பார்த்து என் இதயம் பூரித்தது. படத்தில் மூன்று தலைமுறையை சேர்ந்தவர்களை  ஒன்றாக பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. அருண் விஜய் அண்ணா நிஜத்திலும், திரையிலும் சிறந்த தந்தையாக இருந்து வருகிறார். லவ் யூ அண்ணா. இந்த இதயப்பூர்வமான திரைப்படத்தை @PrimeVideoIN இல் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ள பதிவில், “#OhMyDog குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு சரியான கோடை விருந்தாக இருக்கும்!! அதை தவற விடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் வீரர் பிரசாந்த் சோலங்கி, ”இந்த பாதங்களுக்கு குணப்படுத்தும் சக்தி உள்ளது 'ஓ மை டாக்' பார்க்க ஆவலாக உள்ளேன்!” என்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் பிரைம் வீடியோ மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் இடையேயான 4 பட ஒப்பந்தத்தில் உருவாகியுள்ளது. இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகி வருகிறது. பார்வையாளர்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில்  கிடைக்கிறது.

Related News

8190

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery