டுவென்டி புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சுனீ சேகர் தயாரிப்பதோடு, கதை எழுதி, இசையமைத்து இயக்கும் படம் ‘டீல்’. அதர்வா பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஷான்வி கதாநாயகியாக நடிக்கிறார். சாம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் எஸ்.கிஷோர், சுதா, பிரவ் மோகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஷந்து மேப்பயூர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பி.சி.மோஹனன் எடிட்டிங் செய்கிறார். எம்.எல்.ஆனந்த் நடனம் அமைக்க, ஜாக்கி ஜான்சன் சண்டைப் பயிற்சி அளிக்கிறார். சி.பாலசுப்பிரமணியன் இணை இயக்கம் செய்கிறார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். நிர்வாக தயாரிப்பை எஸ்.கிஷோர் மேற்கொள்கிறார்.
உழைக்காமல் சம்பாதித்து உயர நினைக்கும் ஒருவருக்கும், உழைத்து சம்பாதித்து உயர நினைக்கும் மற்றொருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் ’டீல்’ (DEAL) படத்தின் கதை.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் தொடங்கியது. இந்த படத்துவக்க விழாவில் இயக்குனர் பேரரசு, நடிகர்கள் மன்சூர் அலிகான், சாம்ஸ், முத்துக்காளை, சிஸ்சர் மனோகர், காதல் சுகுமார், வைகாசி ரவி, நடிகைகள் கிருஷ்ணா தேவி, காதல் மல்லி, அகல்யா, சுதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட படகுழுவினரை வாழ்த்தினார்கள்.
காமெடி மற்றும் ஆக்ஷன் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக உள்ள ‘டீல்’ படத்தை இயக்கும் சுனீ சேகர் மலையாளத்தில் ‘நொம்பரம்’, ‘கிருஷ்ண யேட்சா’, ‘பென் மசாலா’ ஆகிய படங்களை இயக்கியிருப்பதோடு, கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...