Latest News :

பைரசி கிரிமினல்களை கண்டுபிடித்துவிட்ட விஷால்!
Friday July-28 2017

மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தில் துப்பறிவாளன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால், நிஜமாகவே துப்பறியும் பணியில் ஈடுபட்டு பைரசி கிரிமினல்களை கண்டுபிடித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற துப்பறிவாளன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வில் விஷால் கூறியுள்ளார்.

 

இயக்குநர் மிஷ்கின் , தயாரிப்பாளர் நந்தகோபால் , இசையமைப்பாளர் அரோல் கொரொலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக், இயக்குநர்கள் சுசீந்திரன் , பாண்டிராஜ் , திரு, நடிகர் அஜய் ரத்தினம், நடிகை சிம்ரன்  ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

 

விழாவில் விஷால் பேசியது, நானும் இயக்குநர் மிஷ்கின் அவர்களும் 8 வருடமாக ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காத்திருந்தோம். அது தற்போது துப்பறிவாளன் என்ற அருமையான படம் மூலமாக நிஜமாகியுள்ளது. மிஷ்கின் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம். துப்பறிவாளன் திரைப்படத்தில் என்னுடைய கேரியர் பெஸ்ட் சண்டை காட்சிகளை பார்க்கலாம். ஒரு தயாரிப்பாளராகவும் , நடிகராகவும் எனக்கு துப்பறிவாளன் பாண்டியநாடை விட முக்கியமான படமாகும். நானும் , பிரசன்னாவும் சிம்ரன் அவர்களின் மிகப்பெரிய ரசிகர்கள். அவரோடு இந்த படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். எனக்கு துப்பறியும் நிபுணர்களின் உடல் மொழி மிகவும் பிடித்துவிட்டது. நான் பைரசி வேலை செய்யும் நபர்களை கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியும். அவர்கள் யார் , அவர்கள் தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பேன். நான் காமராஜர் அய்யா அவர்களின் வழியில் நடப்பேன் , ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன்.லட்சுமிகரமான பெண்ணை கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன். ஒட்டுமொத்த திரையுலகமே சேர்ந்து நிச்சயம் புரட்சி தலைவர் எம்.ஜி.யார் அவர்களுக்கு 1௦௦வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவோம் என்றார் நடிகர் விஷால்.  

Related News

82

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery