முன்னணி இயக்குநர்கள் அனைவரது படங்களிலும் நடித்த நாயகன் என்ற பெருமையை பெற்ற பிரசாந்த், தமிழ் சினிமாவின் இளம் முன்னணி நடிகராக ஒரு காலத்தில் வலம் வந்தார். பிறகு அவரது நடிப்பில் வெளியான படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், இறுதியாக அவரது நடிப்பில் வெளியான ‘சாகசம்’ படமும் எதிர்ப்பார்த்த வெற்ற்றியை பெறவில்லை.
இந்த நிலையில், பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஜானி காடர்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க பிரசாந்த் ஒப்பந்தாம்கியிருக்கிறார். த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ‘ஜானி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மகேந்திரன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜானி படத்தின் தலைப்பில் பிரசாந்த் நடிக்க இருப்பது, கோடம்பாக்கத்தில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனக்கு ஜானி திருப்புமுனையாக இருக்கும் என்று பிரசாந்தும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க, இவர்களுடன் பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஸ் ராணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் வெற்றி செல்வம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...