தமிழ் சினிமா நடிகர்களில் அனைத்து வித்தைகளையும் கற்றுத்தேர்ந்த சகலகலா வல்லவர்கள் என்ற பட்டியலை தயார் செய்தால் அதில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே இடம் பிடிப்பார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் பிரஷாந்த்.
பான் இந்தியா திரைப்படம் மற்றும் பான் இந்தியா ஹீரோ என்று இப்போது சொல்கிறார்கள். ஆனால், அப்போதே பான் இந்தியா ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். தமிழ் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரஷாந்துக்கு இன்றும் கோலிவுட்டில் மட்டும் அல்ல பல மொழிகளில் பெரிய மவுசு இருக்கிறது, என்பதற்கு அவர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘அந்தகன்’ படம் நிரூபிக்கப் போகிறது.
மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, இந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்த ‘அந்தாதூன்’ என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் ‘அந்தகன்’ படத்தில் பார்வையற்ற பியானோ இசைக்கலைஞராக பிரஷாந்த் நடித்திருக்கிறார். உண்மையிலே பியானோ கலைஞரான பிரஷாந்தின் நடிப்பு படத்தில் பெரிதாக பேசப்படும் விதத்தில் வந்திருக்கிறதாம்.
நடிகர் தியாகராஜன் தனது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருப்பதோடு, திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருக்கிறார். தமிழுக்கு ஏற்றபடி சில மாற்றங்களோடு படத்தை இயக்கியிருக்கும் தியாகராஜன், இந்தி அந்தாதூன் படத்தில் இல்லாத சில சுவாரஸ்யங்களை ‘அந்தகன்’ படத்தில் சேர்த்திருக்கிறார்.
அதுமட்டும் அல்ல, ஒரு திரைப்படத்தில் ஒன்று அல்லது இரண்டு ட்விஸ்ட்டுகள் இருக்கும். ஆனால், ‘அந்தகன்’ படம் முழுவதுமே ட்விஸ்ட்டாக இருப்பதோடு, நூறு சதவீதம் ரசிகர்களை ரசித்து வியக்க வைக்கும் படு விறுவிறுப்பான படமாக உருவாகியிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. அதனால் தான் கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் ‘அந்தகன்’ படத்தை வெளியிடுகிறார்.
பிரஷாந்துடன் கார்த்தி, சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி என்று பெரிய நட்சத்திர பட்டாளே நடித்திருக்கும் ‘அந்தகன்’ படத்தை மே மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...