உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அவதார்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன், அவதார் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். உலகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் தலைப்பு டிசைனை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ரிலீஸ் கொரோனா பரவலால் தள்ளிப் போன நிலையில், வரும் டிசம்பர் 16 ஆம் தேதி படத்தை வெளியிட இருப்பதாக 20th Century Studios நிறுவனம் அறிவித்துள்ளது.
அவதார் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படம், முதல் பாகத்தின் சம்பவங்களுக்கு பிறகு, ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலகட்டத்தை கடந்து , சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்சனைகள், ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருக்க, அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் மற்றும் அவர்கள் அடையும் துயரங்கள் அதை கடந்த அவர்களின் வெற்றி தான் இப்படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது .
ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்த இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், CCH பவுண்டர், எடி ஃபால்கோ, ஜெமைன் கிளெமென்ட், ஜியோவானி ரிபிசி மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர். பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், ஸ்டுடியோ "அவதார்" முதல் பாக திரைப்படத்தை செப்டம்பர் 23 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியிடுகிறது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...