தமிழ் இணைய தொடர் ஏரியாவில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் ஜீ5 வெளியிடும் அதன் ஒரிஜினல் வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ5 ஒரினினல்ஸின் ‘விலங்கு’ இணைய தொடர் ஐ.எம்.டி.பி-யின் டாப் தமிழ் வெப் தொடர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த தொடரை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜி5-யின் இணைய தொடர்களான ‘அனந்தம்’ மற்றும் கார்மேகம் ஆகிய தொடர்களும் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் ப்ரியாவின் அனந்தம் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் விருப்பமிகு தொடராக மாறியுள்ளது, பார்வையாளர்கள் இதன் சென்டிமென்ட் கலந்த உணர்வுபூர்வமான கதையினை கொண்டாடி வருகிறார்கள். உண்மையில், எண்ணற்ற நினைவுகளை, ஞாபகங்களை ஒருங்கிணைக்கும் ஒவ்வொரு வீட்டையும் போற்றும் ஒரு அஞ்சலியாகப் இத்தொடர் பாராட்டப்பட்டு வருகிறது. நன்கு எழுதப்பட்ட கதாபாத்திரங்கள், வித்தியாசமான உணர்வுகளுடன் கதைசொல்லலில் யதார்த்தமான அணுகுமுறை, நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு என இத்தொடரின் அனைத்து அம்சங்களும் அபரிமிதமான வெற்றியைப் பெற்றுள்ளன. பிரகாஷ் ராஜ், சம்பத், ஜான் விஜய், சம்யுக்தா, லட்சுமி கோபாலசாமி மற்றும் பிற நடிகர்களின் அட்டகாசமான இதயத்தை கவர்ந்திழுக்கும் நடிப்பு, இந்த ஒரிஜினல் தொடருக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
இத்தொடர் தவிர, ‘கார்மேகம்’ தொடர், ராதிகா சரத்குமாரின் அசத்தலான நடிப்பு, ரசிகர்களை ஈர்க்கும் உணர்வுப்பூர்வமான கதை, பரபர திரைக்கதை, பிரமாதமான உருவாக்கம் என பல காரணங்களுக்காக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
இந்த இணைய தொடர்களின் வெற்றீ மூலம் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ள ஜீ5 தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான இணைய தொடர்களை வழங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஜீ5-யின் புதிய இணைய தொடர்கள் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத அதே சமயம் வியக்க கூடிய விதத்தில் இருக்க கூடிய வகையில் உருவாகி வருகிறதாம். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...