காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் படம் ‘பாலமுருகனின் குதூகலம்’. இதில் அறிமுக நடிகர் பாலமுருகன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘அசுரன்’, ‘ராட்ச்சசன்’ போன்ற படங்களில் நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி, டி.எஸ்.ஆர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் உலகநாதன் சந்திரசேகர் இயக்கும் இப்படத்தை மிதுன் ஆதித் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருப்பூரில் தொடங்கியது. படத்துவக்க விழாவில் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிஜார்ன் கர்ராவ் இசையமைக்கிறார். மப்பு பிரகாஷ் படத்தொகுப்பு செய்ய எல்.கோபி கலையை நிர்மாணிக்கிறார். டேஞ்சர் மணி ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க அப்சர் நடனம் அமைக்கிறார்.
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...