இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 'விலங்கு' வலைதள தொடரின் பிரம்மாண்டமான வரவேற்புக்கு பிறகு விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் 'தெய்வ மச்சான்' படத்திற்கு பார்வையாளர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துவருகிறது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கில் விமலின் தோற்றமும் ரசிகர்களை கவர்ந்திருப்பதால், 'தெய்வ மச்சான்' படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.
கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு காட்வின் இசை அமைக்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மார்ட்டின் மற்றும் வத்சன் இணைந்து எழுதியிருக்க, படத்தின் பின்னணி இசையை அஜீஷ் கவனிக்கிறார். எடிட்டர் இளையராஜா படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
கிராமிய பின்னணியில் ஃபேண்டசி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “கிராமிய பின்னணியில் ஃபேன்டஸியுடன் கூடிய, குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைக்கதை. இதில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை கவரும்” என்றார்.
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...