எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘கடமையை செய்’. இதுவரை யாரும் தொடாத கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை எழுதி வேங்கட் ராகவன் இயக்கியிருக்கிறார். கணேஷ் எண்டர்டைன்மெண்ட் & நஹர் ஃபிலிம்ஸ் சார்பாக டி.ஆர்.ரமேஷ் & ஜாகிர் உசேன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இதில், எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாகவும், யாஷிகா ஆனந்த் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன் , சார்லஸ் வினோத் , சேஷு, ராஜா சிம்மன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அருண்ராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் என்.பி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த டி.ராஜேந்தர் அவர்கள் மிகவும் ரசித்து, நெகிழ்ந்து படக்குழுவினரை மனதார பாராட்டியதோடு இல்லாமல் இந்தப் படத்தை உலகமெங்கும் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலமாக தானே வெளியிடுவதற்கு முன் வந்துள்ளார்.
இந்தக் கோடை காலத்திற்கு குடும்பத்தோடு அனைவரும் கண்டுகளிக்க கூடிய மிக ஜனரஞ்சகமான திரைப்படமாக இருக்கும் என தெரிவித்ததோடு, இப்படத்தை பார்த்து சென்சார் போர்டு இதற்கு ' U' சான்றிதழ் அளித்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரைவில் திரையரங்குகளில் கண்டுகளித்து கொண்டாடக் கூடிய கமர்ஷியல் சக்சஸ் ஆக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் பல புதுமையான விஷயங்களை சொல்லி காட்சிக்கு காட்சி சுவாரசிய படுத்தி உள்ளதாகவும் இது நிச்சயமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்து மிகப்பெரிய அளவில் எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பிரம்மாண்ட வெற்றி காணும், அளவிற்கு அனைவரும் தங்கள் கடமையை செய்துள்ளதாக இயக்குனர் வேங்கட்ராகவன் தெரிவித்துள்ளார்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...