’காவல்துறை உங்கள் நண்பன்’ பட புகழ் சுரேஷ் ரவி மற்றும் சதீஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் மோனிகா சின்னகோட்லா மற்றும் மானசா சவுதிரி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் கருணாகரன், ஐஸ்வர்யா தத்தா, புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தி மாபொகோஸ் கம்பெனி & டிரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் (The Mapogos Company & Trending Entertainment) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பிரவீன் சரவணன் இயக்குகிறார். இவர் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சரவணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மேலும், இயக்குநர் பாலாஜி மோகனிடம் ‘மாரி 2’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இப்படத்திற்கு விஷ்ணுஸ்ரீ கே.எஸ் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...