Latest News :

மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கும் ‘சென்டிமீட்டர்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
Monday May-09 2022

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கி தயாரித்திருக்கும் படம் 'சென்டிமீட்டர்'. இதில் 'அசுரன்' பட புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

 

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். படத்தின் பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜாய் கவனித்திருக்கிறார். சந்தோஷ் சிவன் மற்றும் அஜில் இணைந்து திரைக்கதை எழுத, சசிகுமரன் சிவகுரு வசனம் எழுதியிருக்கிறார். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டிருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அவர்களும், ஷிவாஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் தயாரிப்பாளர் எம். பிரசாந்த் தாஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

 

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டதோடு, படக்குழுவினரையும் வாழ்த்தி காணொலி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

Related News

8237

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery