Latest News :

’விசித்திரன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு! - தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
Tuesday May-10 2022

இயக்குநர் பாலா தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ‘விசித்திரன்’ படம் கடந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

 

மிகப்பெரிய வெற்றி பெற்ற மலையாளப் படமான ‘ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை மலையாள படத்தை இயக்கிய ஜி.பத்மகுமாரே தமிழிலும் இயக்கியுள்ளார். இதில் நாயகிகளாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடிக்க, பக்ஸ், இளவரசு, மாரிமுத்து உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜான் மகேந்திரன் வசனம் எழுதியிருக்கிறார்.

 

உடல் உறுப்புகள் தானம் என்ற பெயரில் வியாபாரம் பேசும் மெடிக்கல் மாஃபியாக்களை நம் கண்முன் நிறுத்தியிருக்கும் இப்படம் மக்களிடமும் விழுப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறது. 

 

பத்திரிகையாளர்கள் பாராட்டும் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. அரசியல் பிரபலங்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் ஆர்கே. சுரேஷின் நடிப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் பிரபலங்கள் ஷிவானி, பாலாஜி, ஜூலி, தாமரை உள்ளிட்டோர் தாங்கள் விசித்திரனை கண்டு வியந்தோம் என தெரிவித்தனர்.

 

மாயன் என்ற ஒரே கேரக்டருக்காக 80 கிலோ எடை… 90 கிலோ எடை.. 120 கிலோ எடை என தன் உடல் எடையை ஏற்றி இறக்கி தன்னை அர்ப்பணித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

 

மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் என்பவர் தான் இந்த கேரக்டரில் நடித்திருந்தார். எனவே அவரின் சாயல் வந்துவிடக்கூடாது என்பதிலும் தான் கவனமாக இருந்ததாக தெரிவித்திருந்தார் ஆர்.கே.சுரேஷ்.

 

அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் விசித்திரன் பெற்று வருவதால் தமிழகத்தில் சில தியேட்டர்களில் திரையிடப்படும் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

 

ஒரு நல்ல படைப்பை கொடுத்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு ‘விசித்திரன்’ ஒரு நல்ல உதாரணம்.

Related News

8238

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery