ஜெய் மற்றும் ஜீவா ஆகியோரது படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததை தொடர்ந்து தற்போது இருவரும் நடிக்கும் புதுப்படங்களுக்கு ரெகுலராக வாங்கும் தங்களது சம்பளத்தில் பாதியை குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, ஓவியா, அஞ்சலி, சந்தானம் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘கலகலப்பு’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கும் சுந்தர்.சி, ஜெய் மற்றும் ஜீவாவை ஹீரோக்களாக ஒப்பந்தம் செய்துள்ளார். ஹீரோயின்களாக நிக்கி கல்ரணி மற்றும் கேத்ரின் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார்கள்.
இந்த நிலையில், ஒரு படத்திற்கு ரூ.3 கோடி சம்பளம் கேட்கும் ஜீவா இந்த படத்தில் ரூ.1.5 கோடி சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கிறாராம். அதேபோல் ரூ.1.5 கோடி சம்பளம் கேட்கும் ஜெய், ரூ.50 லட்சம் சம்பளம் பெற்றுள்ளாராம். நாயகிகளாக கேத்ரின் மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
கலகலப்பு படத்தில் சந்தானத்தின் காமெடி மிகப்பெரிய பலமாக இருந்த நிலையில், கலகலப்பு இரண்டாம் பாகத்திலும் சந்தானத்தை நடிக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சுந்தர்.சி, அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாகும் கொடுக்க தயாராக இருக்கிறாராம்.
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...