Latest News :

’டான்’ படத்தின் அட்வான்ஸ் புக்கிங்குக்கு கிடைத்த அமோக வரவேற்பு!
Thursday May-12 2022

சிவகார்த்திகேயன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டான்’ படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். 

 

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் லைகாவுடன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதோடு, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.

 

‘மாநாடு’ படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா மிரட்டலாக நடித்திருக்கும் ‘டான்’ படம் கல்லூரி மற்றும் பள்ளி பருவக்காலத்தை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கும் வகையில் உருவாகியிருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வெளியிடும் ‘டான்’ நாளை (மே 13) உலகம் முழுவதும் வெளியாகிறது. தற்போது படத்தின் அட்வான்ஸ் புக்கிங்  தொடங்கி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

 

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘டாக்டர்’ போல் ‘டான்’ படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

8244

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery