Latest News :

ஓடிடி-யில் வெளியாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’
Saturday May-14 2022

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம்  வெளியாகி 50  நாட்கள் ஆன நிலையில், அப்படதின் டிஜிட்டல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரம்மாண்ட படங்களையும், இணைய தொடர்களையும் நேரடியாக வெளியிடுவதோடு, பல முன்னணி நடிகர்களின் படங்களின் டிஜிட்டல் உரிமத்தை பெற்று வரும் ஜீ 5  தளம் தான் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டிஜிட்டல் உரிமையையும் பெற்றுள்ளது.

 

அதன்படி, வரும் மே 20 ஆம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஒளிபரப்பாக உள்ளது.

 

இந்த திரைப்பட வெளியீட்டு அறிவிப்பைக் குறிக்கும் வகையில் ஜீ5 தளத்தால் வெளியிடப்பட்ட புதிய மற்றும் பிரத்யேக டிரெய்லரால், தென்னிந்தியத் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் தென்னிந்திய மொழி பேசாத பார்வையாளர்களும் ஜீ5 தளத்தின் இந்த உலக டிஜிட்டல் பிரிமியரைப் பற்றி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  ஏனெனில் அவர்கள் படத்தின் ஒரிஜினல் மொழியில் உருவான வசனங்களுடன் படத்தை சப் டைட்டிலுடன் பார்க்கலாம். மேலும்’ஆர் ஆர் ஆர்’’ திரைப்படம் ஜீ5 தளத்தில் TVOD-இல் கிடைக்கிறது.

 

Related News

8246

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery