Latest News :

‘ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன்’ படத்தின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியது
Saturday May-14 2022

உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களின் மிக முக்கியமான படம் ‘ஜுராசிக் பார்க்’. இப்படத்தை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், அதன் இறுதிப் பாகமான ‘ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன்’ திரைப்படம் இந்தியாவில் வரும் ஜூன் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

 

அனைத்து நாடுகளிலும் ரசிகர்களிடம்  பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இப்படம் ’ஜுராசிக் பார்க்’ படத்தின் இறுதி பாகம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்பு இதுவரை இல்லாத அளவு வானளாவ உயர்ந்துள்ளது. கிறிஸ் பிராட் நடித்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் படம் வெளியாகும் நாளுக்காக, நாட்களை எண்ணிக்கொண்டிக்கின்றனர் . படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் டிக்கெட் முன்பதிவுகள்  துவங்கப்பட்டிருக்கிறது.

 

ஜுராசிக் பார்க் படத்தொடரின் இறுதிப்பதிப்பாக உருவாகியுள்ள இப்படத்திற்கு   60 நகரங்கள் மற்றும் 228 திரைகளில் இப்போது முன்பதிவுகள் துவங்கப்பட்டிருக்கிறது,  ஒரு மாதத்திற்கு முன்னரே ஆரம்பித்துள்ள இந்த சாதனை இப்படம்  அரங்கம் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. மும்பை, புனே, கோவா, அகமதாபாத், டெல்லி, சூரத், இந்தூர், ஹைதராபாத், பெங்களூர், சென்னை உட்பட  பல நகரங்கள் இந்த முன்பதிவு பட்டியலில் உள்ளன.

 

மிக சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்னதாக படக்குழுவினர் இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.  ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் வந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்கள் மீண்டும் இந்த திரைப்படத்தில் வருவது, ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை தந்துள்ளது. நடிகர் Sam Neill இப்படத்தில் Dr. Alan Grant பாத்திரத்திலும்  Dr. Ellie Sattler  பாத்திரத்தில் நடிகை Laura Dern வும், Dr. Ian Malcom பாத்திரத்தில் நடிகர் Jeff Goldblum மும் நடித்துள்ளனர். டைனோசர்களும் மனிதர்களும் இணைந்து வாழ முடியுமா? என்று அதிகம் பேசப்படும் வாதத்தை, இப்படம் இன்னும் பிரம்மாண்டமாக காட்டவிருக்கிறது.  இப்படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களை இருக்கைகளின் நுனியில் வைத்திருக்கும்படி உருவாக்கபட்டிருந்தது, அதுமட்டுமில்லாமல் திரை வரலாற்றில் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்பட தொடருக்கு, ஒரு அற்புதமான பெரிய பிரியாவிடையை  பார்வையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

2015 இல் வெளியான ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படம் மூலம் 1.7 பில்லியன் டாலர் உலக வசூல் சாதனையை நிகழ்த்திய Colin  Trevorrow,  ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். Michael Crichton உருவாக்கிய கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து Derek Connolly (Jurassic World) & Trevorrow உருவாக்கிய கதைக்கு , Emily Carmichael & Colin Trevorrow திரைக்கதை எழுதியுள்ளனர் ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூன் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது 

 

இத்திரைப்படம் திரையரங்குகளில் ஜூன் 10 ஆம் தேதி, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில்  3D, IMAX 3D, 4DX & 2D-ல் வெளியாகிறது.

Related News

8248

‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!
Wednesday December-31 2025

பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது...

’டாக்ஸிக்’ படத்தில் கங்காவாக மிரட்டும் நயன்தார!
Wednesday December-31 2025

யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது...

சூரியின் ‘மண்டாடி’ படத்தில் இருந்து இயக்குநர் விலகிவிட்டாரா ?
Wednesday December-31 2025

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...

Recent Gallery