மறைந்த முன்னாள் தமிழக இந்து அறநிலையத்துறை துணை அமைச்சரும், திரைப்பட நடிகருமான ஐசரி வேலனின் 35 வது நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று (மே 14) சென்னை டாக்டர்.எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் கமல்ஹாசன் கலந்துக்கொண்டு, ஐசரி வேலனின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ’இலவச குடும்ப சுகாதார அட்டை’ வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து நலிந்த நாடக நடிகர்களுக்கு வேல்ஸ் இலவச குடும்ப சுகாதார அட்டையுடன் புத்தாடைகளையும் கமல்ஹாசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் பயன் பெற்றார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய கமலஹாசன், ஐசரி வேலன் அவர்கள் உடனான நட்பு குறித்தும், திரைப்படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தொடர்ந்து உதவி வரும் ஐசரி கே. கணேஷ் அவர்களை வாழ்த்தி, பாராட்டினார்.
அதனை தொடர்ந்து அமரர் ஐசரி வேலன் அவர்களுடன் நடித்த நடிகர்கள் பிரபு, பாகியராஜ், கவுண்டமணி, செந்தில், எஸ்.வி.சேகர், ராஜேஷ், பிரசாந்த், சின்ன ஜெயந்த், நடிகைகள் லதா, ஜெயசித்ரா, வெண்ணிற ஆடை நிர்மலா, ராதிகா, குட்டி பத்மினி, பூர்ணிமா பாக்கியராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட முன்னனி நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது திரைப்பட அனுபவங்கள் குறித்தும் அவர் செய்த சேவைகள் குறித்தும் பகிர்ந்துகொண்டனர்.
மேலும் டாக்டர். ஐசரி கே. கணேஷ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தமது தந்தை ஐசரி வேலன் அவர்களின் நினைவு நாளான மே 14 ஆம் தேதி ஆண்டுதோறும் நலிந்த நாடக நடிகர்கள் மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு விருந்து மற்றும் புத்தாடைகள் வழங்கி சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...