தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான், தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்த நிலையில், இன்று இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
டி.இமான் - மோனிகா தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணமாகி சுமார் 12 வருடங்களுக்கு பிறகு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்றார்கள்.
இதற்கிடையே, இசையமைப்பாளர் டி.இமானுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் பெண் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று இசையமைப்பாளர் டி.இமானுக்கு சென்னையில் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டார்கள்.
தமிழ்த்திரையுலகில் பல படங்களில் கலை இயக்குநராக பணியாற்றி மறைந்த பிரபல கலை இயக்குநர் உபால்டுவின் மகள் அமலியை தான் டி.இமான் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...