தென்னிந்திய சினிமா முழுவதும் ரசிகர்களை கொண்ட விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வரும் நிலையில், இன்று அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
‘குஷி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. போஸ்டரில் இடம்பெற்றுள்ள விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடியை பார்க்கும் போது அவர்களது கெமிஸ்ட்ரி படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்று தெரிகிறது. இதனால், விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரசிகர்கள் குஷியடைந்திருக்கிறார்கள்.
ஷிவா நிர்வாணா இயக்கும் இப்படத்தை நவீன் எர்னானி , ரவிசங்கர் யெலமஞ்சிலி ஆகியோர் தயாரிக்கின்றன. ஹிஷம் அப்துல் வஹாப் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.முரளி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் புடி படத்தொகுப்பு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, உத்தர் குமார், சந்திரிகா ஆகியோர் கலை இயக்குநர்களாக பணியாற்றுகிறார்கள்.
விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா என பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் இப்படம் கலர்புல்லான காதல் படமாக இருப்பதோடு, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகிறது.

தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகும் ‘குஷி’ படத்தை வரும் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...