தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் ‘பவுடர்’ என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக களம் இறங்குகிறார். கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை ஹீரோவாக வைத்து ‘தாதா 87’ என்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பலரது பாராட்டை பெற்ற நிலையில், இப்படத்தின் முதல் பாடலான “ரத்த தெறி தெறி..” என்ற பாடல் ஜூன் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. மேலும், அதே ஜூன் மாதம் படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் முழுவீச்சில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
வித்யா பிரதீப் அனித்ரா நாயர், சாந்தினி தேவா, 'மொட்டை' ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், 'சில்மிஷம்' சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை இயக்கும் விஜய் ஸ்ரீ ஜி, படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்,
ஜி மீடியா சார்பில் ஜெயஸ்ரீ விஜய்,கோவை எஸ் பி மோகன் ராஜ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட் இசையமைக்க, ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குணா படத்தொகுப்பு செய்ய, சரவணா கலையை நிர்மாணித்துள்ளார்.
திரைப்பட பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் ‘பவுடர்’ படத்தின் முன்னோட்டம் பாராட்டு பெற்றுள்ளதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...
Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ’ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ’ஆண் பாவம் பொல்லாதது’...