உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதோடு படத்தின் மீது எதிப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஆடிகள் 15’ படத்தின் ரீமேக்காக இருந்தாலும், தமிழுக்கு ஏற்றபடி திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் உதயநிதிக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.
ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூரின் பேய்வீவ் புரொடக்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் வரும் மே 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்படத்தை பார்த்துள்ளார்.

படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியதோடு, படக்குழுவினரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். இந்த நிகழ்வில், படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல், நடிகை தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
இயக்குநர் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’...
இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...
நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே...