நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படபிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. தமிழ் நாடு உணவு துறை அமைச்சர்சக்கரபாணி கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
திண்டுக்கல்லிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தம்பூண்டி ஊரிலுள்ள சிவன் கோவிலில் ஆரம்பமான படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்றி தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறுகிறது. இதையடுத்து, கொடைக்கானல்,தேனி,காரைக்குடி,கோபிசெட்டிபாளையம்,பழநி ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.
முதல் நாள் படபிடிப்பில் விஜய் ஆண்டனி, தெலுங்கு சூப்பர் ஹிட் ‘ஜதி ரத்னலு’ திரைப்படத்தில் நடித்த ஃபரியா அப்துல்லா ( Faria Abdullah ) ஆகியோர் பங்கேற்றார்கள். தொடர்ந்து, சத்யராஜ், பாரதிராஜா, மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.
1980 கால கட்டங்களில் நடக்கும் கதையை மையமாக கொண்டு உருவாகும் ‘வள்ளி மயில்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கே.சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, கே.உதயகுமார் கலைத்துறையை கவனிக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுத் ஷோபி நடனம் அமைக்கிறார். ஸ்டன் சிவா ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...