Latest News :

சாதனை படைத்த ‘தி வாரியர்’ டீசர்
Tuesday May-17 2022

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொதினேனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தி வாரியர்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், டீசர் வெளியான மூன்று நாட்களில் 10 மில்லியனுக்கு  அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

 

ராம் பொத்தினேனி போலீஸ் அவதாரத்தில் மிரட்டுகிறார், அதே சமயம் பின்னணியில் ரெடின் கிங்ஸ்லியின் பாத்திரம் வலிமைமிக்க சத்யா ஐபிஎஸ் பாத்திரத்தின்  சஸ்பென்ஸை உயர்த்துவதாக அமைந்துள்ளது. ராம் பொதினேனி போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு முற்றிலுமாக மாறியிருக்கிறார். அவர் இப்படத்தில் தமிழில் சொந்தமாக டப்பிங் செய்துள்ளார் & டிரெய்லரில் தமிழில் அவரது மாஸ் டயலாக் டெலிவரியை, தமிழ் பார்வையாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

ஆதி பினுஷெட்டி டீசரில் தனது முரட்டுத்தனமான தோற்றத்தால்  அனைவரையும் கவர்கிறார். விசில் மகாலட்சுமியாக  'கீர்த்தி ஷெட்டி' வழக்கம் போல் தனது எனர்ஜியால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். ராக்ஸ்டார் டிஎஸ்பியின் அட்டகாசமான பின்னணி இசை, ராம் பொத்தினேனியை போலீஸ் சத்யாவாக வேறு நிலைக்கு உயர்த்துகிறது.

 

டீசரில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் உடைய அற்புதமான காட்சிகளும், விஜய்' & அன்பறிவு  சண்டைக் கலைஞர்களின் அட்ரினலின் பம்ப் ஆக்‌ஷனும் இடம்பெற்றுள்ளன. சமூக விரோதிகளை எதிர்கொள்வதற்காக  போலீஸ் தனது அதிரடியான பாதையில் செல்வதை டீஸர் காட்டுகிறது. வாரியர் குழு உஸ்தாத் RAPO ரசிகர்களுக்கு வார இறுதி விருந்தளித்துள்ளது.

 

ராம் பொத்தினேனி நடித்த வாரியர் பல காரணங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாகும். ஏனெனில், இளம் தெலுங்கு நடிகர் முதன்முறையாக பிரபல இயக்குனர் N.லிங்குசாமியுடன் ஜோடி சேர்ந்துள்ளார், மேலும் இந்த படம், இருமொழிகளில் உருவாவதால், கோலிவுட்டில் ராமின் அறிமுக படமாக இருக்கும்.

 

மேலும், ஆதி பினுஷெட்டி இதுவரை திரையில் கண்டிராத வலுவான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இயக்குநர் லிங்குசாமி ஆக்‌ஷன் என்டர்டெய்னர்களுக்கு பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க (அவரது பெயர் விசில் மகாலட்சுமி) அவருடன் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.

 

 

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சிட்தூரி தயாரிப்பில், பவன்குமார் வழங்கும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

Related News

8257

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery