யூடியூப் செனலில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த முதல் தமிழ் இணைய தொடர் என்ற பெருமையை பெற்ற ‘ஆஹா கல்யாணம்’ இணைய தொடரை தொடர்ந்து பிளாக்ஷீப் மற்றொரு இணைய தொடரை தயாரிக்கிறது. ’கன்னி ராசி’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த இணைய தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
‘மீசையை முறுக்கு’, ‘கோலமாவு கோகிலா’, ‘ஆதித்ய வர்மா’ போன்ற படங்களில் நடிகராக பாராட்டு பெற்ற அன்புதாசன் இயக்கும் இந்த இணைய தொடரில் சேட்டை ஷெரில் நாயகனாக நடிக்கிறார். அமேசான் பிரைம் ஸ்டாண்டப் காமெடி புகழ் அபிஷேக் குமார், ஸ்வேதா, ஷாம்னி, பதின் குமார், அருண் கார்த்தி, குட்டி மூஞ்சி விவேக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஒரு நல்ல வேலையுடன் கச்சிதமான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற ஹீரோவின் கனவு நிறைவேறாமல் இருக்கிறது. பின்னர் அவரது வாழ்கை Mr.X என்ற ஒருவரை சந்தித்த பிறகு, அவனது கனவு வேலை அவனுக்கு கிடைக்கிறது, அதிலிருந்து அவன் வாழ்கை சிறப்பானதாக மாறுகிறது. கிருஷ்ணா எப்படி அவனது கனவு வேலையை அடைந்தான்?, Mr.X யார்?, இது தான் கன்னிராசி வலைதொடர், இது மொத்தம் 10 எபிசோட்களை கொண்ட தொடராக உருவாகிறது.
சரவணன் மற்றும் நர்மதா எழுத்தாளர்களாக பணியாற்றும் இத்தொடருக்கு ஃப்ரெட்ரிக் விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் க்லையை நிர்மாணிக்க, அசார் நடனம் அமைக்கிறார். நவநீத கிருஷ்ணன் இணை இயக்குநராக பணியாற்ற, நரேஷ் மற்றும் கிஷோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள்.
எளிமையான பூஜையுடன் ’கன்னி ராசி’ தொடரின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் தொடரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...
நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனும், ‘96’ மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவருமான ஆதித்யா பாஸ்கரும், கெளரி கிஷனும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது...