முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிருவனம் தயாரிக்கிறது. இதில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, ராஜ்கிரண் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ‘விருமன்’ வெளியாகும் என்று 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
‘கொம்பன்’ மூலம் இயக்குநர் முத்தையா - கார்த்தி கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால், இவர்கள் மீண்டும் இணைந்திருக்கும் ‘விருமன்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டீசல்'...
’ஈட்டி’ மற்றும் ‘ஐங்கரன்’ படங்களை இயக்கிய இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது படத்தை விஷாலே இயக்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் ‘பிரமலு’ புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’...