லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படம் ‘கைதி’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்த இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாலம் மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை நிகழ்த்தியது.
ஹீரோயின், பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் என கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும் வித்தியாசமான மேக்கிங் மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இப்படம் தமிழ் சினிமா எதிர்ப்பார்க்காத ஒரு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது.
தற்போது ‘கைதி’ படம் இந்தியில் ‘போலா’ என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதனை ட்ரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் மற்றும் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய மொழியில் பிரம்மாண்டமாக ‘கைதி’ வெளியாக உள்ளது. ‘உஸ்னிக்’ என்ற பெயரில் சுமார் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்த் திரைப்படம் ஒன்று ரஷ்யாவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாவது இதுவே முதல் முறை.
‘உஸ்னிக்’ படத்தை ரஷ்யாவில் வெளியிடும் 4 சீசன்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம், படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு வித்தியாசமான பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...