அறிமுக இயக்குநர் வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. இதில் ஹீரோயினாக மனிஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஓடியன் டாக்கீஸ் சார்பாக கே.அண்ணாதுரை தயாரித்துள்ள இப்படத்திற்கு இயக்குநர் வேலுதாஸ் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கனவு என்கிற குறும்படத்தை இயக்கி கனடா சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற இயக்குநர் வேலுதாஸ், எஸ்.எஸ்.ஸ்டான்லி, நந்தா பெரியசாமி, 'வெற்றிவேல்' இயக்குனர் வசந்தமணி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இப்படம் குறித்து கூறிய இயக்குநர் வேலுதாஸ், “இந்தப்படத்தில் யூடியூப் சேனல் நடத்தும் நிருபராக விமல் நடித்துள்ளார். அவரது நண்பராக சதீஷ் நடித்துள்ளார்.. ஒரு நிருபர் தன் வேலையை செய்கிறார். அதனால் அவருக்கு மிகப்பெரிய இடத்தில் இருந்து ஏற்படும் எதிர்ப்பு மற்றும் பிரச்சனைகளை எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்தப்படத்தின் கதை.
இதுவரை நகரத்து இளைஞனாக அதிகம் நடித்திராத ஒருவர் நடித்தால், அந்த கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால், இந்த படத்திற்கு ஹீரோவாக விமலை தேர்வு செய்தோம்.. விமல் படப்பிடிப்பில் எங்களுக்கு அருமையாக ஒத்துழைப்பு தந்தார்.. நடிகர் சுரேஷ் மேனனும் ஒரு ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்பதால், எனக்கு இருக்கும் சுமையை புரிந்துகொண்டு, அதை எளிதாக்கும் விதமாக நடித்து கொடுத்தார்” என்றார்.
பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவுடன் 23 வருடங்களாக பணியாற்றிய அவரது சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ராம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்ய, கண்ணன் கலையை நிர்மாணித்துள்ளார். சிறுத்தை கணேஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
மும்பையை சேர்ந்த 'இந்தியன் சகீரா' என அழைக்கப்படும் சினேகா குப்தா இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். படத்தின் ஹைலைட்டான அம்சங்களில் ஒன்றாக அந்தப்பாடல் இருக்கும்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் பற்றிய அடுத்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.
இயக்குநர் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’...
இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...
நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே...