சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபு பிரபல நடிகராக இருப்பதோடு, அவரது மூத்த மகன் ராம்குமார் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர்களை தொடர்ந்து ராம்குமாரின் மகன் துஷ்யந்த் நடிரானார். அவரை தொடர்ந்து பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிகரானார். தற்போது இவர்களது குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் நடிகராக களம் இறங்க இருக்கிறார்.
ராம்குமாரின் இளைய மகன் தர்சன் கணேசன் தான் அந்த மற்றொரு வாரிசு. பூனேவில் நடிப்பு பயிற்சியை முடித்த தர்சன் கணேசன், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தெருக் கூத்து நாடகங்களில் நடித்த அனுபவத்தோடு, சினிமாவுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
தற்போது அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், தர்சன் கணேசன் நடிகராக களம் இறங்குவது பற்றி சிவாஜி கணேசன் குடும்பத்தார் விரைவில் அறிவிக்க உள்ளனர்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...