முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், கார்த்தியின் பிறந்தநாளையொட்டி அப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாக உள்ள நிலையில், கார்த்தியின் ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார்’ படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட்டையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளர்.
‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சர்தார்’ படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து வருகிறர். இதில் ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்க, ரஜிஷிய விஜயன், லைலா, முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தில், கார்த்தி போலீஸாக நடிக்கிறார். அவருடைய போலீஸ் கெட்டப் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகைக்கு ‘சர்தார்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, கார்த்தி போலீஸாக நடித்த ‘சிறுத்தை’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதாலும், அந்த செண்டிமெண்ட் ‘சர்தார்’ படத்திலும் ஒர்க் அவுட் ஆகும் என்று எதிர்ப்பார்க்கும் அவருடைய ரசிகர்கள், கார்த்தியின் பிறந்தநாளோடு ‘சர்தார்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்டையும் கொண்டாடி வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...