Latest News :

’விக்ரம்’ மூன்றாம் பாகத்தின் ஹீரோ யார்? - கமல்ஹாசன் பதில்
Monday May-30 2022

கமல்ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் ’விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியுள்ளது. படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

தற்போது படத்தின் புரோமோஷனுக்காக உலகம் முழுவதும் சுற்றி வரும் கமல்ஹாசன், சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது ‘விக்ரம்’ மூன்றாம் பாகத்தில் நடிகர் விஜயை எதிர்ப்பார்க்களாமா? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர்,  'விக்ரம் 3' படத்திற்காக ஏற்கெனவே ஒருவரை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளோம், என்றவர், விஜய் ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

 

’விக்ரம் 3’ பாகத்தில் ஹீரோ என்று கமல் சொன்னது சூர்யாவை தான். விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சூர்யா விக்ரம் மூன்றாம் பாகத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

8275

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery