Latest News :

’அக்னிச் சிறகுகள்’ படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா
Monday May-30 2022

அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரிப்பில், நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி  முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆக்‌சன் த்ரில்லர் படமான ‘அக்னி சிறகுகள்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டார். 90 வினாடிகள் கொண்ட இந்த டீசர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இயக்குநர் நவீன்.எம்-ன் ஸ்டைலிஷான உருவாக்கம், குறிப்பாக விஜய் ஆண்டனி & அருண் விஜய்யின் அதிரடியான திரை தோற்றம் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை வழங்கியுள்ளது.

 

இப்படம் குறித்து தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில், “படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யாவுக்கு ஒட்டுமொத்த அக்னிச் சிறகுகள் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்கள் முழு குழுவிற்கும் மிகவும் முக்கியமான நெருக்கமான மற்றும் சிறப்பு வாய்ந்த திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை உருவாக்குவது மிகுந்த  சவால்கள் நிறைந்த அனுபவமாக இருந்தது. தற்போது டீசருக்கு கிடைத்துள்ள அற்புதமான வரவேற்பைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இருவருமே திரையில் மேஜிக்கை உருவாக்குவதில் வல்லவர்கள். இந்த படத்தில் அவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும், திரையில் முற்றிலும் பிரமாண்டமாகவும் இருக்கிறார்கள். டீசரில் உள்ள குரல்வழி சொல்வது போல், இந்த திரைப்படம் இரண்டு கிளாடியேட்டர்களுக்கு சொந்தமானது. மேலும் அவர்களின் மாயாஜால திரை இருப்பு மற்றும் நடிப்பு பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும். இயக்குனர் நவீனின் அட்டகாசமான உருவாக்கத்தில் திரைப்படம் மிகவும் சிறப்பாக வெளிவந்துள்ளது. இத்திரைப்படம்  அவரை தமிழ் சினிமாவில் பெரும் உயரத்திற்கு கொண்டு செல்லும்.” என்றார்.

 

அக்‌ஷரா ஹாசன், ரைமா சென், சம்பத், சென்ட்ராயன், ஜேஎஸ்கே மற்றும் பல வெளிநாட்டு மற்றும் இந்திய கலைஞர்களும் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு எம்.நடராஜன் சங்கரன் இசையமைக்க, கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பு செய்ய, பரஞ்சோதி துரைசாமி நிர்வாக தயாரிப்பை கவனித்துள்ளார்.

 

ஆஸ்கர் விருது பெற்ற ஸ்டண்ட் இயக்குநர் விக்டர் இவனோவ், ஜைதர்பெக் குங்குஷினோவ், கார் சேஸ் நிபுணர் அலெக்சாண்டர் டெரெகோவ் ஆகிய வெளிநாட்டு ஸ்டண்ட் இயக்குநர்களுடன் பெளர்ஷான் அபிஷேக் மற்றும் மகேஷ் மேத்யூ ஆகிய இந்திய ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

 

ரஷ்யா, சுவிட்சர்லாந்து, கஜகஸ்தான் போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்னி சிறகுகள்’ டீசருக்கு கிடைத்த வரவேற்பால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Related News

8276

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery