Latest News :

‘தி வாரியர்’ படப்பிடிப்பு முடிவடைந்தது
Tuesday May-31 2022

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வந்த ‘தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள “புல்லட்” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் மிகப்பெரிய சாதனை படைத்த நிலையில், படத்தின் டீஸரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் புது  அறிவித்துள்ளனர். இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில், இயக்குநர் என்.லிங்குசாமி நடிகர் ராம் பொதினேனி திரையில் அறிமுகமாகும் மாஸ் காட்சி ஒன்றை படம்பிடித்துள்ளார்.

 

 ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் ’தி வாரியர்’ படத்தை பார்க்கக் காத்திருக்கும் பார்வையாளர்களுக்கு, இந்த  பேக் டு பேக் அப்டேட்கள் பெரும் விருந்தாக அமைந்துள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக பல விளம்பர நிகழ்வுகளை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

ஆதி பினிசெட்டி இதுவரை திரையில் கண்டிராத வகையில் வலுவான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இயக்குநர் லிங்குசாமி தனது அசத்தலான மாஸ், கமர்ஷியல் படங்களுக்காக பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் ராம் மற்றும் ஆதி இருவரும் சிறந்த நடிப்பை  வழங்குவதில் வல்லவர்கள். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உடன் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.

 

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சிட்தூரி தயாரிக்க, பவன்குமார் வழங்கும் ‘தி வாரியர்’ வரும் ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related News

8279

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery