பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஏற்கனவே கடும் கண்டனத்தை தெரிவித்த அவரது குடும்ப நண்பரான நடிகர் பிரகாஷ்ராஜ், தற்போது கவுரி லங்கேஷின் மரணத்தை கொண்டாடுபவர்கள் மோடியை பின்பற்றுபவர்கள் என்றும், அவர்களுக்கு பிரதமர் மோடி ஆதரவு தருவதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து தனது கண்டனத்தை மீண்டும் பதிவு செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை சமூக வலைதளங்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் யார் எங்கு இருக்கிறார்கள்? அவர்களது சித்தாந்தம் என்ன? என்று எல்லோருக்கும் தெரியும். இந்த கொலையை கொண்டாடுவது மிகவும் கொடூரமானது. அவர்கள் பிரதமர் மோடியை தவிர வேறு யாரையும் பின்பற்றாதவர்கள்.
மோடி தனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார். இதன் மூலம் அவர் என்னை விட மிகப்பெரிய நடிகராக முயற்சித்து வருகிறார் என்பதை நிரூபித்து உள்ளார்.
பிரதமர் இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. தனது ஆதரவாளர்களில் சிலர் கொடூரமாக நடப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் முயற்சி செய்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...