Latest News :

பரத், வாணி போஜன் நடிப்பில் உருவாகும் ‘மிரள்’! - மிரட்டும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Wednesday June-01 2022

’மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சுலர்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருவதோடு வித்தியாசமான ஜானர்கள் படங்களை தயாரித்து வரும் அக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு, தயாரிக்கும் ஐந்தாவது படத்தில் பரத், வாணி போஜன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். எம்.சக்திவேல் இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

‘மிரள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லும் மற்றும் மோஷன் போஸ்டர் படத்தின் தலைப்பை போலவே படு மிரட்டளாக உள்ளது.

 

ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்கள் தமிழ் திரையில்  இதுவரை கண்டிராத த்ரில்லர் அனுபவத்தை வழங்கும், இப்படத்தில் பரத், வாணி போஜன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

 

Miral First Look Poster

 

கதை, வசனம் எழுதி எம்.சக்திவேல் இயக்கும் இப்படத்திற்கு பிரசாத் எஸ்.என் இசையமைக்க, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். கலைவாணன்.ஆர் படத்தொகுப்பு செய்ய, கணிகண்டன் சீனிவாசன் கலையை நிர்மாணித்துள்ளார். டேஞ்சர் மணி ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, சச்சின் சுதாகரன் - ஹரிஹரன்.எம் ஒலியை வடிவமைத்துள்ளனர். 

 

தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு தயாரிப்பில் உருவாகும் வித்தியாசமான த்ரில்லர் படம் என்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Related News

8281

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery