லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ படம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்ட திரைப்படமாகவும், பான் இந்தியா திரைப்படமாகவும் உருவாகி வருகிறது. அப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில், ‘தி வாரியர்’ படத்தை தொடர்ந்து ராம் பொத்தினேனி நடிக்கும் மற்றொரு பான் இந்தியா திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. தெலுங்கு சினிமாவில் பல பிளாக் பஸ்டர் படங்களை இயக்கிய போயபத்தி ஸ்ரீனு இப்படத்தை இயக்குகிறார். இது அவருக்கு 10 வது திரைப்படமாகும்.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் மூலம் ஸ்ரீனிவாசா சிட்தூரி தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘போயபத்தி ரபே’ (BoyapatiRAPO) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் பவன்குமார் தயாரிக்கும் 9 வது படமாகும்.
தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி ஹீரோக்களில் ராம் பொதினேனியும் ஒருவர். அவரது வசீகரம், நளினம் மற்றும் அசத்தல் நடிப்பால், அவர் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார். அவரது டப்பிங் படங்கள் யூடியூப்பில் பெரும் எண்ணிக்கையில் பார்வைகளை குவித்து சாதனை படைக்கின்றது. இந்த பிரமாண்டமான படம் ராம் பொதினேனியின் 20 வது படமாகும்.
இன்று ஐதராபாத்தில் இப்படம் பூஜையுடன் தொடங்கியது. இந்த துவக்க விழாவில் இயக்குநர்கள் லிங்குசாமி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.
இப்படம் குறித்து ஸ்ரீனிவாசா சிட்தூரி கூறுகையில், “போயபத்தி ஸ்ரீனுவின் இயக்கத்தில் இப்படத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 'தி வாரியர்' படத்திற்குப் பிறகு ராம் பொத்தினேனியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்கள் பேனரில் வரும் மதிப்புமிக்க படமாக இருக்கும். இந்த படத்தை நாங்கள் உயர் தொழில்நுட்ப தரத்துடன் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கிறோம். படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிட உள்ளோம்.” என்றார்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...