Latest News :

’விக்ரம்’ படத்துடன் ‘மாயோன்’ டிரைலர்!
Thursday June-02 2022

சிபி ராஜ், தன்யா ரவிச்ச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’ மக்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் முக்கியமான படமாகும். டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

 

படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது. 

 

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகளில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்துடன் ஜூன் 3 ஆம் தேதி முதல் வெளியாகும் என அறிவித்துள்ளனர். 500-க்கும் மேலான திரையரங்குகளில் ’விக்ரம்’ படத்துடன் ’மாயோன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. 

 

மேலும் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் ’தசாவதாரம்’ படத்தில் ”கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்” என கமல் வசனம் பேசி இருந்த நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு ’மாயோன்’ படத்தில் பதில் கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர். 

 

இதனால் ’மாயோன்’ திரைப்படம் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன பதில் இருக்கிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆவலும் பல மடங்களு அதிகரித்துள்ளது.

 

’மாயோன்’ திரைப்படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

8283

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery