அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு மும்பை, புனே ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் டீசர் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘ஜவான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என பிரம்மாண்டமான கமர்ஷியல் ஆக்ஷன் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் அட்லீ, முதல் முறையாக பாலிவுட் நடிகர் ஷாருக்கனை வைத்து இயக்குகிறார். பிரம்மாண்டமான ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கௌரி கான் தயாரிக்கிறார்.
விரைவில் இப்படத்திற்கான இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படத்தை 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...