Latest News :

ஜெய் ஆகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ ஆவார் - இசையமைப்பாளர் தேவா வாழ்த்து
Wednesday June-08 2022

டாக்டர்.செளந்தராஜன் வழங்க, ஸ்ரீ அம்மன் மீடியாஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘அமைச்சர் ரிட்டன்ஸ்’. டி.ஜெயலக்‌ஷ்மி கதை, வசனம் எழுதியிருக்கும் இப்படத்தின் திரைக்கதை எழுதி இயக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார் ஜெய் ஆகாஷ். தேவா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை மதன் கார்கி, சினேகன் ஆகியோர் எழுதியுள்ளனர். வி.இ.இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ராஜன், சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் தளபதி, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தேவா, “நான் இசையமைத்து 10 வருடங்கள் ஆகிறது. அதற்கு காரணம் என் உடல் நிலை மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக இருந்தது தான். 10 வருடங்களுக்கு பிறகு ஜெய் ஆகாஷ் என்னிடம் வந்து ‘அமைச்சர் ரிட்டன்ஸ்’ படத்திற்கு இசையமைத்து தர வேண்டும் என்றார். நானும் இசையமைத்து கொடுத்திருக்கிறேன். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. ஜெய் ஆகாஷை எனக்கு நீண்ட வருடங்களாக தெரியும். கடுமையான உழைப்பாளி, சினிமாவில் பல வருடங்களாக பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறார், அவர் நிச்சயம் முன்னணி ஹீரோ ஆவார். 

 

இப்போதுள்ள இசையமைப்பாளர்களின் பாடல்கள் புரியவில்லை என்று சிலர் சொல்வார்கள். அதாவது தங்களுக்கு வாய்ப்பில்லை என்றால் இதுபோல சொல்வார்கள் என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மையில்லை இந்த காலத்துக்கு ஏற்ப அவர்கள் இசையமைக்கிறார்கள், அவர்களும் நன்றாகவே இசையமைக்கிறார்கள். என்னிடம் இப்போது இசையமைக்க சொன்னால், என் பாணியில் மெலோடி பாடல்கள் போடுவேன், அதேபோல் இப்போதைக்கு ரசிகர்களின் பேவரைட் என்ன, லேட்டஸ்ட் டிரெண்ட் என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ற்படி பாடல் போட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பது தான் உண்மை. எனவே காலத்துக்கு ஏற்ப இசையமை மாற்றிக்கொடுக்க வேண்டும். அப்படி தான் இந்த படத்தில் ஒரு பாடல் செய்திருக்கிறேன், அந்த பாடல் சிறப்பாக வந்துள்ளது. இந்த ‘அமைச்சர் ரிட்டன்ஸ்’ மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “தம்பி ஜெய் ஆகாஷ் கடுமையான உழைப்பாளி, அவரை ராமகிருஷ்ணா படத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். இப்போது சில வருடங்கள் அவர் காணாமல் போய்விட்டவர் திரும்ப வந்துவிட்டார். பாடல்கள் மிக சிறப்பாக இருந்தது. தேவா தொடர்ந்து இசையமைக்க வேண்டும், அவரது தேனிசை பாடல்கள் தொடர்ந்து வெளியாக வேண்டும். இந்த படத்தில் நடித்திருக்கும் கிகி வால்ஸ் கனடாவில் இருந்து பட புரமோஷனுக்கு வந்திருக்கிறார் வாழ்த்துகள். அவரது நடனம் நன்றாக இருந்தது. படம் கமர்ஷியலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

 

‘அமைச்சர் ரிட்டன்ஸ்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள், எங்க இருந்து ரிட்டன்ஸ் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இருந்து வருகிறாரா அல்லது திஹார் ஜெயிலில் இருந்து வருகிறாரா, என்பது படத்தை பார்த்தால் தான் தெரியும். பெரிய இயக்குநர்களும், நடிகர்களும் சினிமாவில் கொள்ளை அடிக்கிறார்கள். சிறிய நடிகர்களாக அறிமுகமாகி பிறகு பெரிய நடிகர்கள் என்று கூறி அதிகமான சம்பளம் வாங்கி சினிமாவை அழிக்கிறார்கள். இதுபோன்ற சிறிய படங்கள் தான் சினிமாவை வாழ வைக்கின்றன. அந்த வகையில், ‘அமைச்சர் ரிட்டன்ஸ்’ மிகப்பெரிய வெற்றி பெற்று சினிமாவை வாழ வைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

நாயகனும் இயக்குநருமான ஜெய் ஆகாஷ் பேசுகையில், “அமைச்சர் படம் ஏற்கனவே வெளியாகி விட்டது. அதில் அமைச்சர் சாதுவாக இருப்பார். அப்படி இருப்பவரால் சில விஷயங்களை செய்ய முடியாது. எனவே அமைச்சர் அதிரடி செயல்களை செய்து தவறுகளை திருத்துவது தான் ‘அமைச்சர் ரிட்டன்ஸ்’. ராஜன் சார் சொன்னது போல் அமைச்சர் எங்கிருந்து வருகிறார் என்பதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. இந்த படத்திற்காக எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. ‘அமைச்சர் ரிட்டன்ஸ்’ நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்றார்.

 

டாக்டர்.செளந்தரராஜன் பேசுகையில், “’அமைச்சர் ரிட்டன்ஸ்’ பாடல்கள் மிக சிறப்பாக இருந்தது. ஜெய் ஆகாஷ் படத்தை அழகாக இயக்கியிருப்பதோடு, மிக நன்றாக நடித்திருக்கிறார். இளைஞர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது. ஜெய் ஆகாஷ் போன்ற வளரும் கலைஞர்களை பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் வளர்த்து விட வேண்டும். அப்போது தான் இதுபோன்ற தரமான படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகும். அமைச்சர் ரிட்டன்ஸ் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

Related News

8298

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery