Latest News :

பொழுதுபோக்கு துறையில் புதிய புரட்சி! - வருகிறது விஷ்ணு மஞ்சுவின் ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட்
Friday June-10 2022

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு மஞ்சு, தயாரிப்பாளர் தொழிலதிபர் என பன்முக திறன் கொண்டவராகவும் வலம் வருகிறார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய தரமான திரைப்படங்களில் நடித்து வருவதோடு, ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் பல படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை விஷ்ணு மஞ்சு தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மூலம் திறமை மிக்க புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு, வித்தியாசமான முயற்சிகள் மற்றும் புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்பளித்து ஊக்கம் அளிக்க விஷ்ணு மஞ்சு முடிவு செய்துள்ளார்.

 

மேலும், இந்நிறுவனம் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பு மட்டும் இன்றி இணைய தொடர்கள், ஆவணப்படங்கள், டாக்குமெண்டரி மற்றும் சர்வதேச தரத்திலான குறும்படங்கள் தயாரிப்புகளில் ஏ  வி ஏ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஈடுபட உள்ளது.

 

ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமே மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமான ஃபான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சன்னி லியோன், பயல் ராஜ்புட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படம் விஷ்ணு மஞ்சுவின் 19 அது திரைப்படமாகும்.

 

Ginna

 

இந்த புதிய நிறுவனம் வரும் ஜூன் 10 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ள இந்த நிறுவனத்துடன், ஏ வி ஏ மியூசிக் மற்றும் ஏ வி ஏ ஸ்டுடியோஸ் என்ற நிறுவனங்களையும் விஷ்ணு மஞ்சு தொடங்குகிறார்.

 

ஏ வி ஏ மியூசிக் நிறுவனம் மூலம் சுயாதீன தனி இசை பாடல்கள், இசை ஆல்பங்கள் மற்றும் தரமான மற்றும் ரசிகர்களுக்கான இசை படைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். ஏ வி ஏ ஸ்டுடியோஸ் மூலம் சினிமா துறைக்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு, தொழில்நுட்ப ரீதியிலான தரம் மிக்க திரைப்படங்களை உருவாக்கி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

 

ஏ வி ஏ நிறுவனம் மூலம் ஒட்டு மொத்த பொழுதுபோக்கு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த வரும் ஏ வி ஏ நிறுவனம் பற்றிய மேலும் பல தகவல்களை நிறுவனத்தின் தொடக்க நாளான ஜூன் 10 ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

Related News

8301

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery