Latest News :

அருள்நிதி பிறந்தநாளில் வெளியாகும் ‘தேஜாவு’
Friday June-10 2022

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் அருள்நிதி ‘தேஜாவு’, ‘டி பிளாக்’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கும் நிலையில் தற்போது பெயர் வைக்கப்படாத ஒரு படத்திலும், ‘டிமாண்டி காலனி 2’ படத்திலும் நடிக்க இருக்கிறார்.

 

இந்த நிலையில், அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘தேஜாவு’ திரைப்படம் அவரது பிறந்தநாளான ஜூலை 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

Deajavu

 

வைட் கார்ப்பட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில், பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பி பிஜி முத்தையா இணை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அருள்நிதியுடன் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள்.இ படத்தொகுப்பு செய்ய, பிரதீப் தினேஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். வினோத் ரவீந்திரன் கலையை நிர்மாணித்துள்ளார்.

Related News

8303

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery