Latest News :

விஜய் ஆண்டனிக்காக பழமையான சென்னையை கட்டமைக்கும் இயக்குநர்!
Saturday June-11 2022

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் இயக்குநர் விஜய் ஆண்டனி, ‘தமிழரசன்’ மற்றும் ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களை முடித்து விட்டார்.  தற்போது‘காக்கி’, ‘பிச்சைக்காரன் 2’, ’கொலை’, ‘ரத்தம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, ‘வள்ளி மயில்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

 

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் திரைப்படமான ‘வள்ளி மயில்’ படத்தை சுசீந்திரன் இயக்க, நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார். 1980 களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

 

இப்படத்திற்காக திண்ட்டுக்கல் மாநகரில் 1982 -ம் காலக்கட்ட பின்னணியை கண் முன் கொண்டு வரும் வகையில் ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

 

விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் துவங்க உள்ள இயக்குநர் சுசீந்திரன், பழமையான சென்னையை கட்டமைக்கும் விதமாக பிரம்மாண்டமான செட் அமைக்க திட்டமிட்டுள்ளார். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையை தொடர்ந்து டெல்லியில் மிக முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

 

இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி ராமையா,ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

Valli Mayil

 

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய உதயகுமார் கலையை நிர்மாணிக்கிறார். 

 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

8304

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery