நடிகைகளிடம் பேட்டி எடுக்கும் டிவி சேனல், பத்திரிகை உள்ளிட்ட எந்த ஊடகமாக இருந்தாலும், சினிமாவில் ஹீரோயின்களுக்கு பாலியல் தொல்லை இருக்கிறதா? என்ற கேள்வியை கேட்க தவறுவதில்லை. நடிகைகளும் எந்த வித பயமோ இன்றி, தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிடுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.
அப்படி எந்த சர்ச்சியையும் நயந்தாரா ஏற்படுத்த வில்லை என்றாலும், பெண்கள் விஷயத்தில் அஜித் எப்படிபட்டவர்? என்பதை சொல்லி வம்பில் சிக்கியிருக்கிறார்.
தனது அறம் படத்தின் புரோமோஷனுக்காக தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வரும் நயந்தாரா, சமீபத்தில் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்து பேசும் போது, “அஜித் போன்ற ஒருவரை நான் பார்த்த்தே இல்லை. சூட்டிங் செட்டில் அனைவரையும் அன்பாக விசாரிப்பார். அவரும் சரி ரஜினி சாரும் சரி, பெண்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்கள். நம் அருகே பெண்கள் வந்தால் இருவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்து பேசுவார்கள். அந்த விஷயத்தில் அவர்களை தட்டிக்க ஆளே இல்லை. அதனால் அவர்களுக்கு மிகப்பெரிய ஸ்டார் வேல்யூ உள்ளது.” என்று கூறினார்.
நயந்தாராவின் இந்த அஜித் துதியால், விஜய் ரசிகர்கள் அவர் மீது ரொம்ப கடுப்பாகியிருக்கிறார்கள். காரணம் நயந்தாரா விஜயுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார்.
இதனால், நயந்தாராவின் அறம் படம் மட்டும் அல்ல, அவர் நடிப்பில் வெளியாக உள்ள அனைத்து படங்களையும் தவிர்ப்போம் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சபதம் ஏற்று வருகிறார்கள்.
ஏற்கனவே தான் தயாரித்த அறம் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் திணறி வரும் நயந்தாரா, எப்போதும் போல வாயை பேச பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...