Latest News :

இந்திய சினிமாவில் இது முக்கியமான படமாக இருக்கும் - ‘வள்ளி மயில்’ படம் பற்றி இயக்குநர் சுசீந்திரன்
Wednesday June-15 2022

விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் ஆகியோரது நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘வள்ளி மயில்’ திரைப்படம் 80-களில் இருந்த நாடகக்கலை பின்னணியில் உருவாகிறது. இதில் ஹீரோயினாக ஃபரியா அப்துல்லா நடிக்கிறார். இவர்களுடன் அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன்  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பாஸ்கர் சக்தி வசனம் எழுத விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, உதயகுமார் கலையை நிர்மாணித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. 

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுசீந்திரன், “இந்த படத்தின் கதையை நான்கு வருடமாக நான் எழுதி வருகிறேன். இந்த படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். இது எல்லோரும் எளிதில்  ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்த படம் நிறைய உழைப்பை வாங்கியுள்ளது. வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ஃபரியா நடிக்கிறார். அவர் தான் இந்த படத்தின் உயிர். இது எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. நடிகை கல்பனா உடைய மகள் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார், கனி அகத்தியன் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். எனக்கு இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படம். இமான் கடினமான உழைப்பாளி, அவருடன் நான் 9 படங்கள் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் முழு அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். ஆக்‌ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படைப்பாக இது இருக்கும்.” என்றார்.

 

நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “இந்த படத்தில் சுசீந்திரன் அவர்களிடம் இருந்து நான் இயக்கத்தை கற்றுக்கொண்டேன். இயக்கத்தில் நானும் இறங்கியதால் நான் ஒவ்வொன்றையும் கவனிக்கிறேன், படத்தை தரமாக உருவாக்குகிறார் இயக்குநர் சுசீந்திரன். இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கின்றனர்.  அவர்களுடைய நடிப்பு திறமை அபாரமானது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும்,  நன்றியையும் கூறிகொள்கிறேன். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில்  இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா,  சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் "வள்ளிமயில்". 80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும்  இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.” என்றார்.

 

நடிகை ஃபரியா அப்துல்லா பேசுகையில், “நான் தியேட்டர் கலைஞராக தான் என் பயணத்தை தொடங்கினேன். சுசீந்திரன் உடைய பொறுமை தான், இந்த கதை சிறப்பாக உருவாக காரணம். அவர் என்னிடம் கதை சொல்லும்போதே மியூசிக் எல்லாம் போட்டுக்காட்டினார், நான் இயக்குநரின் பார்வையை முழுமையாக நம்பி தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டுள்ளேன். இந்த கதை நிச்சயம் எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை.” என்றார்.

 

வசனகர்த்தா பாஸ்கர் சக்தி பேசுகையில், “குறுகிய காலத்தில் கணிசமான படங்களை கொடுத்து, வெற்றியை கண்டவர் சுசீந்திரன். எனது நாவலை படித்துவிட்டு, அதை அழகர்சாமியின் குதிரை என்ற படமாக மாற்றினார். வள்ளி மயில் திரைக்கதையை வெகுநாட்களாக பேசிகொண்டிருந்தோம். கடுமையான உழைப்பில் உருவான கதை ‘ வள்ளி மயில்’.  இந்த திரைப்படம் திரைத்துறையில்  பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது உங்களுக்கு நிச்சயம் பிடித்தபடமாக இருக்கும்.” என்றார்.

 

நடிகை அறந்தாங்கி நிஷா பேசுகையில், “சில படங்கள் பண்ணி இருந்தாலும், காமெடி கதாபாத்திரத்தில் என்னை வெளிப்படுத்திக்கொள்ள, எனக்கு பெரிய வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது. கலைஞர்களின் பரிந்துரைகளுக்கு மரியாதை கொடுப்பவர் இயக்குநர். எனக்கு அனைவரையும் ஈர்க்கும் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கும். விஜய் ஆண்டனி சார் மற்ற கலைஞர்களை பாராட்டும் குணம் கொண்டவர். தமிழ் சினிமாவிற்கு ஃபரியா எனும் சிறந்த நடிகை இந்த படத்தின் மூலம் கிடைத்துள்ளார். வள்ளி மயில் திரைப்படம் நாடக கலைஞர்களை போற்றும் ஒரு படமாக இருக்கும். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

Related News

8310

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery