Latest News :

மாமனிதர்களின் சிலைகளுக்கு மரியாதை செய்த ‘மாமனிதன்’ இயக்குநர்
Friday June-17 2022

’தென்மேற்கு பருவக்காற்று’, ‘தர்மதுரை’, ‘நீர்ப்பறவை’ போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் நடித்துள்ள படம் ‘மாமனிதன்’.  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்திற்கு முதன் முறையாக யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளது.

 

ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான ஆர்.கே.சுரேஷ், தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ‘மாமனிதன்’ படத்தை வெளியிடுகிறார்.

 

இந்த நிலையில், தமிழக திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் மாமனிதர்களாக போற்றப்படும் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் மற்றும் டாக்டர்.கலைஞர் ஆகியோரது சிலைக்கு இயக்குநர் சீனு ராமசாமி மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

 

இது குறித்து கூறிய இயக்குநர் சீனு ராமசாமி, “இந்த தமிழ் சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக்கு நன்றி கூறும் விதமாக  என் அன்பை மலர்களாக சமர்ப்பித்தேன்.” என்றார்.

Related News

8313

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery